• Apr 24 2026

உங்க லிஸ்ட்ல என் படம்தான் இருக்கும்... அஜித் ரசிகர்களை சீண்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9 -ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.


இந்நிலையில் நேற்று லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. அப்போது பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், " லால் சலாம் படத்தின் அப்டேட்கள் வெளியிட்டால். எங்களுக்கு வரும் ரிப்ளை எல்லாம் தலைவர் 171 படத்தின் அப்டேட்கள் போடுங்க, விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் போடுங்க என்று வரும்".


"இதை எல்லாம் பார்க்கும் போது நம்ப லிஸ்ட்லேயே இல்ல போல என்ற எண்ணம் தோன்றியது. படம் உருவான பிறகு சொல்லுறேன். என்னுடைய படம் உங்களுடைய லிஸ்ட்ல இருக்கும்" என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த பேச்சி தற்போது வைரலாகிவருகிறது காரணம் அஜித் ரசிகர்களும் அந்த அப்டேட்காகத்தான் காத்துகொண்டிருக்கிறார்கள்.  

Advertisement

Advertisement