தமிழக அரசியல் களத்தில் நேற்று நடந்த நிகழ்வுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய், பதவியேற்ற உடனேயே மக்கள் நலனுக்காக மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து இன்று காலை தமிழகத்தின் 17-வது சட்டசபை கூட்டம் தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார்.

இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ரியாக்சன் தான் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. அவர் செய்த முகபாவனை மற்றும் உடனடி எதிர்வினை கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பலரும் அதனை மீம்களாக மாற்றி பகிர்ந்து வருகின்றனர்.
இந்த காட்சிகள் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பரவிவருகின்றது. சிலர் இதை அரசியல் நகைச்சுவையாக பார்க்க, மற்றவர்கள் அதனை ஆழமான செய்தியாகவும் விவாதித்து வருகின்றனர். இதனால் சட்டசபை கூட்டம் தற்போது இணையத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
Listen News!