• Jan 19 2025

எழில் விசயத்துல இதுதான் நடந்தது..புட்டுபுட்டு வைத்த பாக்கியலட்சுமி அமிர்தா

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பலருக்கும் ஃபேவரைட்டான ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் கேரக்டரில் ஆக்டர் விஜே  விஷால் நடித்திருந்தார். இவருக்காகவே பல ரசிகர்கள் இந்த சீரியலை பார்த்து வந்தார்கள். 

எனினும் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகர் விஷால் விலகி விட்டார். அவருக்கு பதிலாக நடிகர் நவின் தற்போது நடித்து வருகின்றார். இவர் பாக்கியாவின் மகனாக எழில் கேரக்டரில் நடிக்கின்றார். ஆனால் இவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்களா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.


இந்த நிலையில், நடிகர் விஷால் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலக காரணம் என்னவென்று அவருக்கு ஜோடியாக அதே சீரியலில் நடித்த நடிகை அக்ஷிதா தெரிவித்துள்ளார்.


அதன்படி அவர் தெரிவிக்கையில், பாக்கியலட்சுமி சீரியலில் நான் ரித்திகாவுக்கு பதிலாக தான் என்ட்ரி ஆனேன்.. எனக்கு ஆரம்பத்தில் இருந்து உதவி செய்தது விஷால்தான். எனக்கு நிறையவும் சப்போர்ட்டாக இருந்தார். நடிகராக மட்டும் இன்றி நல்ல நண்பராகவும் அவர் காணப்பட்டார்.

இந்த சீரியலில் மட்டுமின்றி உண்மையாகவே விஷாலுக்கும் அதே குணம் தான். மிகவும் நல்லவர் அவர். ஆனாலும் செட்டில் நடந்த சில விஷயங்களை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது. அவர் இனி எடுக்கும் முயற்சி அத்தனைக்கும் நான் துணையாக இருப்பேன். அவருக்கு தற்போது இந்த சீரியலின் முக்கியத்துவம் குறைந்த காரணத்தினாலையே அவர் வெளியேறி உள்ளார் என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement