• Dec 12 2024

பிக் பாஸ்ல இதுதான் என்ன ரொம்ப பாதிச்சது..! சாச்சனாவின் அதிரடியான இன்ஸ்டா போஸ்ட்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் சாச்சனா. 21 வயதான இவர் பார்ப்பதற்கு சிறிய தோற்றத்தை உடையவராகவே காணப்படுகின்றார். இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டதோடு இந்த படமும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8-ல் கலந்து கொண்டார். ஆனாலும் வரலாற்றின் முதன் முறையாக பிக் பாஸ் சீசன் எட்டில் வைக்கப்பட்ட 24 மணி நேர எலிமினேஷனில்  சிக்கி சாச்சனா எலிமினேட் ஆகியிருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதன் பின்பு சாச்சனா மீண்டும் வருவாரா? இல்லையா? என்று பலருக்கு சந்தேகம் இருந்தது. நான்கு நாட்களின் பின் சாச்சனா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். அதுவரையில் அவர் சீக்ரெட் ரூமில் இருந்ததாக கூறப்படுகிறது. சாச்சனா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தது ரசிகர்களுக்கு பெரும்  மகிழ்ச்சியை கொடுத்தது.

d_i_a

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்ற டாஸ்க்குகளில் வெற்றி தோல்வி என சகஜமாக விளையாடி வந்தார். ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் இவருடைய பேச்சும் நடவடிக்கையும் ரசிகர்களை வெறுப்புக்கு உள்ளாக்கும் வகையில் காணப்பட்டது. அத்துடன் நாமினேஷன் லிஸ்டில் சிக்கி ஒவ்வொரு வாரமும் இவர் விஜய் சேதுபதியால் காப்பாற்றப்பட்டு வருகின்றார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இறுதியில் கடந்த வாரம் டபுள் எலெக்ஷன்என்று அறிவித்த விஜய் சேதுபதி, அதில் ஆனந்தியையும் சாச்சனாவையும் எலிமினேட் செய்து இருந்தார். ஒரு சாரார் சாச்சனா வெளியேறியது தொடர்பில் வருத்தம் தெரிவித்தாலும் இன்னும் சிலர் விஜய் சேதுபதியின் முடிவுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள்.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் சென்ற சாச்சனா முதல் முறையாக தனது இன்ஸ்டா  பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில் அவர் கூறுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனது பயணம் 24 மணி நேரம் எலிமினேஷனில் இருந்து மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்து விளையாடுவது என்பது மிகவும் சவாலானது. இந்த பயணத்தில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். மேலும் எனது குறைகளை சரி செய்து கொள்கின்றேன். பிக் பாஸ் வீட்டில் இருந்த காலத்தில் என்னை நம்பி எனக்கு வாக்களித்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிக் பாஸ் வீட்டில் உங்கள் ஆதரவோடு 60 நாட்கள் இருந்தேன். இன்றுவரை நீங்கள் காட்டிய அன்பும் பாசமும் என்னை மிகவும் பாதித்தது. உங்களுடைய அன்பு இல்லை என்றால் நான் இந்த சாதனையை படைத்திருக்க முடியாது. இந்த வாய்ப்பு தந்த விஜய் டிவி மற்றும் விஜய் சேதுபதி எல்லாருக்கும் நன்றி கூறி அவர்களை டேக் பண்ணி உள்ளார் சாச்சனா.

Advertisement

Advertisement