• Dec 12 2024

வெற்றிமாறனுடன் இணையும் வெறித்தனமான கூட்டணி...! STR நடிப்பில் அடுத்த படைப்பு...!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். அதைத் தொடர்ந்து சூரி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 


இதற்கிடையில் வெற்றிமாறன் சிம்புவை வைத்து படம் இயக்க பலமுறை திட்டமிட்டிருந்தாராம். வடசென்னை படத்தில் தனுஷின் கால் ஷீட் கிடைக்காத காரணத்தால் சிம்பு நடிப்பில் தான் வடசென்னை படத்தை இயக்க இருந்தாராம் வெற்றிமாறன்.


ஒரு சில காரணங்களால் வெற்றிமாறன், சிம்பு கூட்டணி இணையாமல் போனது. அதற்கு முன்னதாகவே ஒரு முறை சிம்புவிற்காக கதை ஒன்றை தயார் செய்து வைத்திருந்தாராம் வெற்றிமாறன். அப்பொழுதும் அந்த கூட்டணி இணைய முடியாமல் போன காரணத்தால் இனி வரும் காலத்தில் சிம்புவை வெற்றிமாறன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் STR48 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து str-48 திரைப்படத்தில் இணைய உள்ளனர். மேலும் கவுதம் மேனன் இருவரும் இதுவரை மூன்று முறை இணைந்துள்ளனர். அந்த மூன்று படங்களுமே மாபெரும் வெற்றியடைந்துள்ளது. நான்காவது முறையாக இணையவிருக்கும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போகிறார்களாம். இதுவாகும் மாபெரும் வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




Advertisement

Advertisement