• Jan 18 2025

என்ன பாக்கியா இதுக்கே ஷாக்கான எப்படி? ஈஸ்வரி போட்ட மாஸ்டர் பிளான்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி வீட்டார்களுடன் பாக்கியாவுக்கு நான் நிறைய அநியாயம் பண்ணி விட்டேன் என்று பேசியதோடு ஈஸ்வரியிடம் நான் உங்களுக்கு ஒரே பையன் தானே.. என் அப்பாட உடலுக்கு கொள்ளி வைக்க விடாதது என்னை ரொம்பவும் பாதித்தது என்று ரொம்ப எமோஷனலாக பேசுகின்றார்.

அதன் பின்பு பாக்கியா வாக்கிங் போக, அந்த நேரத்தில் பாக்கியா வாக்கிங் போனால் யார் இனியாவுக்கு சாப்பாடு கொடுப்பது என்று கேட்கின்றார். அதற்கு இனியாவும் ஈஸ்வரியும் சிரித்துவிட்டு பாக்யா காலை சாப்பாடு, மதிய சாப்பாடு எல்லாமே செய்து வைத்து விட்டு தான் செல்வார். ஜெனிக்கும் ஆரோக்கியமா சாப்பாடு செய்து வைப்பார்.

d_i_a

பாக்கியா எத்தனை மணிக்கு எழுந்து கொள்கிறா, எத்தனை மணிக்கு தூங்குறா என்பது யாருக்கும் தெரியல என்று பாக்கியாவை பற்றி பெருமையாக பேசுகின்றார் ஈஸ்வரி. மேலும் அவர் ஒரு அதிசய பிறவி என்று சொல்லுகின்றார்.

அதன் பின்பு ராதிகா வீட்டிற்கு வர ஈஸ்வரி கோபியை பார்க்க விடாமல் மறுக்கின்றார். ஆனாலும் அங்கு இருந்த பாக்யா ஈஸ்வரியை மிரட்டி வைத்து ராதிகாவை பார்க்க அனுப்புகின்றார். ராதிகா உள்ளே போய் கோபியை அழைக்கவும் அவர் நல்ல தூக்கத்தில் இருக்கின்றார். இதனால் ராதிகா வெளியே வந்து விடுகின்றார்.


இதன் போது இனி கோபியை பார்க்க வர வேண்டாம் என்று ஈஸ்வரி சொல்லி அனுப்புகின்றார். அதன் பின்பு கோபி ரூமில் இருந்து தண்ணீர் கேட்க, ஈஸ்வரி தூங்குவது போல் நடிக்கின்றார். கோபி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க பாக்கியா வேறு வழியில்லாமல் தண்ணி கொண்டு போய் கொடுக்கின்றார்.

இதன்போது கோபி தன்னை காப்பாற்றியதற்கு நன்றி கூறுகின்றார். மேலும் தான் இதை எப்போதும் மறக்க மாட்டேன் என்று சொல்கின்றார். இதனை வெளியே இருந்து ஈஸ்வரி கேட்டு சந்தோஷப்படுகின்றார். 

இறுதியாக செல்வி பாக்யாவிடம் ஈஸ்வரிக்கு உன்னையும் கோபி சாரையும் சேர்த்து வைப்பதற்கு ப்ளான் இருக்கு போல என்று சொல்கின்றார். இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement