• May 07 2024

என்னடா இது விக்ரமுக்கு வந்த சோதனை... ஒரேடியாய் தள்ளிப் போன 'தங்கலான்' ரிலீஸ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள படைப்பாக 'தங்கலான்' உருவாகியுள்ளது. பா. ரஞ்சித், விக்ரம் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்து வருகின்றனர். இந்நிலையில் 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல வித்தியாசமான, சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வரவேற்பினை பெற்று வருபவர் விக்ரம். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்திருந்தார். இப்படத்தின் ஐஸ்வர்யா ராயுடனான காட்சிகளில் தனி முத்திரை பதித்து சாதனை படைத்தார்.


இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து பா. ரஞ்சித்துடன் இணைந்தார் விக்ரம். இவர் தற்போது கேஜிஎப் தங்க சுரங்கம் குறித்த உண்மை வரலாற்றினை கூறும் விதமாக 'தங்கலான்' படத்தினை இயக்கி வருகிறார். ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தில் சீயான் விக்ரமுடன் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். 


பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகியுள்ள நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரேயடியாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement