• May 30 2026

பிறந்தநாளில் வெளியான வீடியோ.. விக்ரமின் 63-வது படம் எப்படி இருக்கும்?

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சிறப்பு சர்ப்ரைஸாக தனது 63வது திரைப்பட டீசரை வெளியிட்டுள்ளார். இன்று அவரது பிறந்தநாளை ஒட்டி இந்த அப்டேட் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த புதிய படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன் வித்தியாசமான கதைக்களங்களுடன் பல படங்களை இயக்கிய இவர், விக்ரமுடன் இணைவதால் இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பை  உருவாகியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றுகிறார். தனது தனித்துவமான இசை ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பதால், இந்த கூட்டணி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

விக்ரம் தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதற்காக அறியப்பட்டவர். அந்த வகையில், இந்த 63வது படமும் புதுமையான கதையையும், சக்திவாய்ந்த நடிப்பையும் கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்ட டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement