ஆதிக் ரவி இயக்கத்தில் அஜித் ,திரிஷா நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 10 வெளியாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியாகிய விடாமுயற்சி திரைப்படத்தினால் சோகத்தில் இருந்த ரசிகர்கள் குட் பேட் அக்லி teaser 3.1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
அஜித் கார் ரேசிங்கில் பிஸியாக இருப்பதால் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனால் தற்போது தனது தீவிர ரசிகனான ஆதிக் ரவியுடன் மீண்டும் இணைவதாக அஜித் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனாலும் சமீபகாலங்களாக இவர் அடுத்த படம் சிறுத்தை சிவா ,வெற்றிமாறன் இருவரையும் ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் தனது குட் பேட் அக்லி பட இயக்குநருடன் இணையவுள்ளார். மேலும் படம் நல்ல வரவேற்பினை பெறும் எனவும் எதிர்பார்க்கபடுகின்றது.
Listen News!