• Sep 20 2024

'இது என்னுடைய படம் அல்ல'- காளி பட சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் லீனாவின் பரபரப்பான டுவிட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மதுரையைச் சேர்ந்தவர் தான் திரைப்பட இயக்குநர் லீனா. இவர் கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக விளங்குகின்றார். அத்தோடு பாலியல், சமூக ஒடுக்குமுறை, ஈழப்போராட்டங்கள் என பல பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இதற்காக பல சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார்.

மேலும் கடந்த 2ம் திகதி 'ரிதம்ஸ் ஆஃப் கனடா' என்ற நிகழ்ச்சியில் மணிமேகலை இயக்கிய காளி திரைப்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து, காளி போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து இருந்தார் லீனா மணிமேகலை.

இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், மதத்தை புண்படுத்திவிட்டதாக கூறி லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் எனவும் பலர் கருத்துக்களை பகிர்ந்தனர்.

மேலும், டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு இதற்கு லீனா மணிமேகலை, கனடாவின் டொராண்டோவின் தெருக்களில் ஒரு பெண் உலா வருவதைப் பற்றிய ஆவணப்படம் தான் இது என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், லீனா, தனது ட்விட்டர் பக்கத்தில், சிவன் மற்றும் பார்வதி வேடமிட்ட நாடக கலைஞர்கள் புகைப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, கிராமப்புற நாடகக் கலைஞர்கள் நிகழ்ச்சியை எப்படி நடத்துகிறார்கள் என்பது பற்றி பா.ஜ.கவின் ஊதியம் பெறும் ட்ரோல் ஆர்மிக்கு தெரியாது. இது என்னுடைய படம் அல்ல. அன்றாட கிராமப்புற இந்தியாவிலிருந்து வரும் இது போன்ற கலைகளை, சங்பரிவாரங்கள் தங்கள் இடைவிடாத வெறுப்பு, மத வெறியால் அழிக்க நினைக்கிறார்கள். இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது என பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement