• Sep 19 2024

'இது வெறும் திரைப்படம் அல்ல, ஒரு வரலாற்று சாதனை'- ராக்கெட்ரி படத்தை பாராட்டிய பிரபல விஞ்ஞானி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஜூன் 1ந் தேதி பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகியது தான் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட். இப்படத்தை நடிகர் மாதவனே இயக்கி நடித்துள்ளார்.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது. இப்படத்தில் 80 வயதான நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளதோடு இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

60 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போது. இதுவரை 15 கோடி ருபாய் மட்டுமே வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தை பார்த்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்தை பார்த்து தனது கருத்தை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ராக்கெட்ரி நம்பி விளைவு: எங்களை சிறிது நேரம் வாயடைக்க செய்துவிட்டது. இஸ்ரோவில் மீண்டும் வாழ்ந்தது போல் உணர்ந்தேன். இது வெறும் திரைப்படம் அல்ல, ஒரு வரலாற்று சாதனை, திரையில் ஒரு காவியம் என குறிப்பிட்டுள்ளார்.மேலும், நம்பி நாராயணன் பாதிக்கப்பட்டதைப் போல எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படக்கூடாது.

நம்பி நாராயணன் அவர்களின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் இந்த படத்தின் மூலம் மக்கள் தெரிந்து கொண்டார்கள். திரு. நம்பி நாராயணனுக்காக இந்த மகத்தான பணியை செய்ததற்காக மாதவன் நான் தலை வணங்குகிறேன். அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று மயில்சாமி அண்ணாதுரை நெகிழ்ந்து பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement