• Sep 19 2024

யானை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குநருடன் கை கோர்த்த நடிகர் அருண் விஜய்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முதல் வெளியாகிய திரைப்படம் தான் யானை. இப்படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் லீட் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். . இந்தப் படம் வெளியாகி தற்போது சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் முதல்தாரத்து மகன்களான தன்னுடைய அண்ணன்களை பிரிந்து வாடும் அருண் விஜய், தொடர்ந்து இரு குடும்பங்களையும் சேர்த்து வைப்பதை கதைக்களமாக படம் கொண்டுள்ளது.சாதாரண கதைக்களம்தான் என்றாலும் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் ஆகியவை படத்தை ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது

இந்நிலையில் இந்தப் படம் அருண் விஜய்க்கும் இயக்குநர் ஹரிக்கும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் சிறப்பான அங்கீகாரத்தை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது.இந்தப் படம் தற்போது தமிழகத்தில் மட்டுமே ரூ.12.5 கோடிகளுக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

Director Vijay at Devi(L) Success Meet

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிரபல இயக்குநர் ஏஎல் விஜய்யுடன் அருண் விஜய் புதிய படத்திற்கான கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement