தென்னிந்திய சினிமாவில் இப்படியெல்லாம் நடக்கின்றது-பரத் நடிகை அதிர்ச்சி புகார்

தென்னிந்திய சினிமாவில் மற்ற மாநிலங்களை சேர்ந்த நடிகைகள் தான் அதிகம் நடிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.மேலும் அப்படி தென்னிந்திய படங்களில் நடித்த நடிகை கூறி இருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் இதற்கு முன்பு நடித்து இருப்பவர் எரிகா பெர்னாண்டஸ். அவர் தமிழில் ஐந்து ஐந்து ஐந்து, விழித்திரு போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

எனினும் தற்போது ஹிந்தி சினிமா மற்றும் சின்னத்திரையில் அவர் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமாவில் சந்தித்த பிரச்சனை பற்றி கூறி இருக்கிறார்.

18 வயது இருக்கும்போது இவர் தென்னிந்திய படம் ஒன்றில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது தோற்றத்தில் ஒல்லியாக இருந்ததால் லுக் மாற்ற பல பொருட்கள் பொருத்தி குண்டாக இருப்பது போல காட்டினார்கள். தற்போது அப்படி ஒரு விஷயத்தை நான் செய்யவே மாட்டேன்.

ஒல்லியாக இருப்பதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கியும் இருக்கிறார்கள். நானும் கஷ்டப்பட்டு எடையை கூட்டி இருப்பேன், ஷூட்டிங் சென்று பார்த்தால் அந்த ஹீரோ இன்னும் குண்டாக மாறி இருப்பார். அவருடன் ஒப்பிடும்போது நான் ஒன்றுமே இல்லாமல் இருப்பேன்.

அத்தோடு இப்படி தான் சந்தித்த பிரச்சனைகள் பற்றி எரிகா பெர்னாண்டஸ் தெரிவித்து இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்