• May 18 2026

தற்போது வரை திருமணம் நடைபெறவில்ல.. காரணம் என்ன.? அவரே சொன்ன பதில்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். குறிப்பாக ‘மெட்ராஸ்’ படத்தில் அவரது இயல்பான நடிப்புக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றார்.

சினிமாவைத் தாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. 100 நாட்களுக்கு மேல் அந்த வீட்டில் இருந்து இரண்டாவது சீசனின் பட்டத்தையும் வென்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.


இதற்கிடையில் தனது நீண்ட நாள் நண்பரான வினோத் லட்சுமணனை கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்தார். திருமண தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி திருமணம் நடைபெறும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

ஆனால் தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. குடும்ப காரணங்களும் எதிர்பாராத சூழ்நிலைகளும் இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து ரசிகர் ஒருவர் கேட்டபோது, “நான் நினைத்தது நடக்கவில்லை” என ரித்விகா பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement