• May 18 2026

பதவி இல்லாமலே சேவை செய்ய முடியாதா.? விஜய், திரிஷா பற்றி மனம் திறந்த ஷகிலா

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் விஜய் தற்போது அரசியல் களத்தில் களம் புகுந்துள்ளார். அதற்கு பின்பு அவருடைய மனைவி அவரிடம் விவாகரத்து கோருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

மேலும் அவர் கொடுத்த விவாகரத்து மனுவில், தன்னுடைய கணவருக்கு நடிகை ஒருவருடன் தவறான உறவு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பலரும் அது திரிஷா தான் என பல கருத்துக்களை விமர்சிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா நட்பைப் பற்றி தேவையற்ற விமர்சனங்களுக்கு நடிகை ஷகிலா  கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்கக் கூடாதா? ஏன் ஒரு நல்ல நட்பை கொச்சைப்படுத்த வேண்டும்? அவர்களுடைய நட்பை விமர்சிப்பது தவறானது.

விஜய்க்கு பல தடைகள் வந்துள்ளன. மற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பல விஷயங்கள் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதனை எவ்வளவு தான் கஷ்டப்படுத்துவீர்கள்? பதவி இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா? பதவி இல்லாமலேயே நல்லது செய்ய முடியாதா? என்ற கருத்தையும் சகிலா முன்வைத்துள்ளார்.


மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய் தன்னுடைய நிலையை விட்டு மக்களுக்காக வர முயற்சித்தது சின்ன விஷயம் அல்ல. இங்கு யார் உத்தமர்கள்? எத்தனை பேர் ராமர் போல இருக்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

விஜயும் திரிஷாவும் நல்ல நண்பர்களாக இருக்கக் கூடாதா? ஒரு திருமணத்திற்கு ஒரே மாதிரி உடை அணிந்து செல்வதில் என்ன தவறு? ஆண்-பெண் நட்பு இருக்கக் கூடாதா? நாங்கள் எந்த காலத்தில் இருக்கிறோம்? ஒரு நட்பை தேவையற்ற முறையில் கொச்சைப்படுத்த வேண்டாம். அவர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி பேசுவது தேவையற்றது.

“மனைவி, குழந்தைகளை பார்க்காதவர் எப்படி நாட்டையும் நாட்டு மக்களையும் பார்ப்பார்?” என்று கேட்பதும் தேவையில்லை. கமல் அரசியலுக்கு வந்தபோதும் இப்படித்தான் விமர்சனம் வந்தது. அவர்கள் குடும்பத்தை பார்க்கிறார்களா, பார்க்கவில்லை என்பதல்ல; நாட்டிற்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதையே பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement