• May 20 2026

காத்திருந்தது போதும்! களமிறங்குகிறது 'கொலைச்சேவல்'.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகு திரையரங்குகளுக்கு வரவிருக்கும் படங்களில் ஒன்றாக "கொலைச்சேவல்" உருவெடுத்துள்ளது. ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. பாலா தயாரிக்கும் இந்தப் படம், ஆரம்ப கட்டத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

‘கொலைச்சேவல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. அந்த நேரத்தில் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான தலைப்பு, கிராமத்து பின்னணி மற்றும் அதிரடி நிறைந்த லுக் ஆகியவை படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கின.


ஆனால் அதன் பிறகு படம் குறித்து பெரிய அப்டேட்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் படம் என்ன ஆனது எனக் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி, ‘கொலைச்சேவல்’ படம் வருகிற 13-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வி. ஆர். துதிவாணன் இயக்கியுள்ளார். முதல் படம் என்பதால், கதைக்களம் மற்றும் காட்சியமைப்பில் அவர் தனித்துவமான முயற்சி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement