• Apr 01 2025

ரோகிணிக்கு முத்து வைத்த செக்.. மலேசியாவுக்கு அவசரமாக கிளம்பிய விஜயா குடும்பம்..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் மட்டுமில்லாமல் இதன் கதைக்களமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த  கதை களத்திற்கான எபிசோடு சுமார் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காணப்படுகின்றார்கள். தற்போது இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில், முத்துவும்  மீனாவும் அண்ணாமலையிடம் வந்து, இந்த டிக்கெட்டில் ஒரு சைன் போடுமாறு கேட்கின்றார்கள். என்ன விஷயம் என்று கேட்க, மலேசியா செல்ல உள்ளதாக சொல்லுகின்றார்கள். இதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகின்றார்.


அதன் பின்பு மனோஜிடம் என்னோட அப்பா ஜெயிலில் இருக்கும்போது இவங்க போய் பார்க்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று அழுது நாடகம் போடுகின்றார். இதனால் மனோஜும் அதை நம்பிக்கொண்டு விஜயாவிடம் யாரும் மலேசியாவுக்கு போக வேண்டாம் என்று சொல்லுகின்றார்.

எனினும் அங்கிருந்த மீனா, சம்மந்தி வீட்டில் இருந்து யாரும் வந்து பார்க்கவில்லை என்றால் தப்பா நினைப்பார்கள் என்று சொல்ல, விஜயாவும் உடனே நாங்கள் போய் பார்த்துட்டு வருவோம் என்று சொல்கின்றார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ரோகிணி திக்கித் திணருகிறார்..

இவ்வாறு இந்த ப்ரோமோ வெளியான நிலையில் விஜயா குடும்பம் மலேசியா செல்லுமா? இந்த விடயத்திலும் ரோகிணியின்  முகத்திரை கிழிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement