விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுள் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது கோபி மீண்டும் பாக்கியாவுடன் இணைவாரா? ராதிகா கோபியை விட்டு பிரிவாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த கதைகளத்திற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.
அதன்படி குறித்த ப்ரோமோவில், பாக்கியலட்சுமி எடுத்துக் கொண்ட சமையல் ஆர்டரை பரபரப்பாக எல்லோரும் செய்து கொண்டு இருக்க, அங்கு கோபியும் கிராமத்து முறையில் வேட்டி அணிந்து பாக்கியாவின் சமையலுக்கு உதவி செய்கின்றார்.
இதன்போது பாக்கியா அங்கிருந்த ஈஸ்வரியிடம் டெஸ்ட் பண்ணி பாருங்க என்று கொடுக்க, அதை எடுத்து சாப்பிட்ட கோபி இப்படி ஒரு கோலா உருண்டையை நான் சாப்பிட்டதே இல்லை என்று பாக்கியாவை புகழ்ந்து தள்ளுகின்றார்.
இதைத்தொடர்ந்து பாக்கியாவிடம் உன்னுடைய குக்கிங் ஸ்கில், ஆளுமை திறன் எல்லாமே கிரேட் என கோபி சொல்லுகின்றார். அதற்கு தாங்க்ஸ் என்று பதில் சொல்லுகின்றார் பாக்கியா. இதனை ராதிகா பார்த்து விடுகின்றார்.
அதன் பின்பு ஈஸ்வரி ராதிகாவிடம் நீ மட்டும் கோபியை விட்டு விலகிச் சென்றால் மீண்டும் அவன் பாக்கியாவுடன் சந்தோசமாக இருப்பான் என்று சொல்லுகின்றார். இதனால் ராதிகா எடுக்கப் போக முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!