• Feb 20 2026

கீர்த்தியின் பியூட்டிஃபுல் மூவ்மென்ட்ஸ்..!! அடுத்தடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் இதோ..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆன ஆண்டனி தட்டிலை  பெற்றார்களின் சம்மதத்துடன் திருமணம் செய்தார். தனது திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ரிவால்வர் ரீட்டா  பெரும் தோல்வியை சந்தித்தது.

மலையாளத்தில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து, தமிழ் சினிமாவில் ஏ.எல் விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதற்கு பின்பு வெளியான ரஜினி முருகன் திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இதனால் வரிசையாக கீர்த்திக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன. 

அதன்படி விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.  மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்று அசத்தினார் கீர்த்தி சுரேஷ். 


ஆனாலும் அதற்கு பிறகு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட போதும்  அவருக்கான சான்ஸ்கள் குறைந்தன. இது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.  ஆனாலும் மனம் தளராமல் அதற்கு பின்பும் பல படங்களில் நடித்தார். 

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் கடந்த 2025 ஆம் ஆண்டு தனது வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

Advertisement

Advertisement