• Apr 28 2026

நட்டியின் பலே திட்டம்.! 'தங்க நட்சத்திரம்' பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட படக்குழு

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் நட்டி நட்ராஜ். பல்வேறு கதாபாத்திரங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அவர், தற்போது புதிய படமாக ‘தங்க நட்சத்திரம்’ மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார்.

இந்த திரைப்படத்தை உமாபதி இயக்கியுள்ளார். அரசியல் பின்னணியுடன் கூடிய காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எம்.எஸ் பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா, கிங்ஸ்லி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement