• May 18 2026

கொஞ்சமாவது விவஸ்தை வேண்டாமா? - மேடையிலேயே நிஷாவை வெளுத்து வாங்கிய விடிவி கணேஷ்!

shali / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லீடர்’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததுடன், தயாரிப்பையும் மேற்கொண்டுள்ளார். 

அவருடன் இணைந்து ஷியாம், லால், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பயல் ராஜ்புத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார்.


இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தங்களது அனுபவங்களையும், படப்பிடிப்பு நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய அறந்தாங்கி நிஷா, படத்தைப் பற்றிய விஷயங்களை விட தனது கணவருடன் ஊர் சுற்றிய அனுபவங்களை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார். மேலும், அடுத்த படத்தில் லெஜண்ட் சரவணனுடன் ஜோடியாக நடிக்க விரும்புவதாகவும் சிரிப்பூட்டும் விதமாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய விடிவி கணேஷ், “கொஞ்சமாவது விவஸ்தை வேண்டாமா? படத்தை விட்டுவிட்டு சொந்த விஷயங்களைப் பேசுகிறாரே” என்று நேரடியாக விமர்சித்தார். அவரது இந்த கருத்து அங்கு சற்று அதிருப்தி ஏற்படுத்தியதுடன், தற்போது சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement