தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்றுவரும் நடிகை துஷாரா விஜயன் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து நடத்தி வரும் போட்டோஷூட்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
சாதாரணமாக கதாபாத்திரங்களில் தீவிரமான மற்றும் தைரியமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த துஷாரா, தற்போது தனது ஸ்டைலிஷ் மற்றும் கிளாமரான லுக்குகளாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படங்களில் அவர் சாறியில் அழகாகவும், அதே நேரத்தில் மாடர்ன் ஸ்டைலில் கிளாமரான போஸ்களிலும் தோன்றியுள்ளார்.
இந்த லுக் கிளாமரா? அல்லது ஹோம்லியா? என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். சிலர் அவரது எளிமையான அழகை பாராட்ட, மற்றவர்கள் அவரது ஸ்டைலான காட்சியை ரசித்து வருகின்றனர்.
குறைந்த படங்களில் நடித்திருந்தாலும், தனது திறமையால் தனி இடத்தைப் பெற்ற துஷாரா விஜயன், சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். தற்போது வைரலாகும் இந்த புகைப்படங்கள், அவரின் பிரபலத்தை மேலும் உயர்த்தியுள்ளன.
Listen News!