தமிழ் சினிமாவில் தனி அடையாளம் கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது இயக்கும் புதிய திரைப்படம் ‘பைசன்’ குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர்.
இப்படம் 2025 அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தற்பொழுது ரிலீசுக்கு முன்னதாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர், ரசிகர்களுக்கு அளிக்கவுள்ள ஆழமான உள்ளடக்கத்தையும், கதையின் நுணுக்கங்களையும் உணர்த்தியுள்ளது.
படத்தின் ரிலீஸுக்கு 7 நாட்கள் இருக்கின்ற நிலையில் தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். வித்தியாசமான பின்னணியில் உள்ள இந்த போஸ்டர், கதையின் உணர்வூட்டும் பாணியை வெளிப்படுத்துகிறது.
அத்துடன் இந்த போஸ்டர் ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!