தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது. சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், தற்பொழுது நடிகராக திரையுலகிற்கு என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

அதாவது, இவர் தற்பொழுது அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கியுள்ள ‘வித் லவ்’ படத்தில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.
படக்குழு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, திரைப்படத்தின் முக்கிய பாடல் ’அய்யோ காதலே’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என கூறப்பட்டுள்ளது. இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக அனஸ்வரா நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘அய்யோ காதலே’ பாடல், காதல் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாடலின் வரிகள், இசை வடிவமைப்பு, ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Listen News!