• Mar 26 2026

ஆதி குணசேகரனை தட்டித்தூக்கிய கொற்றவை.? புதிய திருப்பத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய எபிசோட்டில்,  பொலிசாரிடமிருந்து தப்பிக்க பாசத்தை பகடைக்காயாக பயன்படுத்துகின்றார் ஆதி குணசேகரன். அதன்படி கதிரிடம் அவருடைய மகள் தாராவுக்கு போன் போட்டு அப்பா இனி வரமாட்டார், அம்மாவை பத்திரமா பாத்துக்கோ என சொல்ல, அதைக் கேட்டு பதறிய தாரா அவசர அவசரமாக வீட்டுக்குச் சென்று,  நந்தினியிடம் நடந்தவற்றை கூறுகின்றார். 

அதன் பின்பு நந்தினிக்கு  போன் போட்டு எமோஷனலாக பேசுகின்றார்   கதிர். மேலும் தான் வெளி மாநிலத்திற்கு செல்ல தயாராக இருப்பதாகவும் கூறுகின்றார்.  தந்தை மீது பாசமாக உள்ள  தாரா, அப்பத்தாவிடம் சென்று   கண்ணீர் விட்டு கதறி பேச , உங்க அப்பா செஞ்சது தப்புமா என விஷாலாட்சி கூறுகின்றார் .


இன்னொரு பக்கம்,  கதிர் நந்தினிக்கு போன் போட்டு  பேசும்போது அதனை ட்ராக் செய்து தெரிந்து கொண்ட கொற்றவை ஜனனியிடம் இது தொடர்பாக பேசுகின்றார்.  அதற்கு ஜனனியும் இது நம்மள டைவர்ட் பண்ணத்தான் இப்படி பிளான் பண்ணுறாங்க.. எல்லோரும் சென்னையில் இருந்து கிளம்பி தமிழ்நாட்டில் எங்கேயாவது  செல்லத்தான் பிளான் பண்ணி இருப்பாங்க..  நம்மள திசை திருப்பி விட தான் இப்படி ஒரு பொய்ய சொல்லி இருப்பாங்க என கொற்றவையிடம் கூறுகின்றார்.

அதன்படி, சென்னையில் இருந்து தப்பித்த ஆதி குணசேகரன்  செல்லும் வழியில் போலீஸ் அவர்களை  தடுத்து நிப்பாட்டுகின்றனர். இதனால் வேறு வழி இன்றி ஆதி குணசேகரன்  பொலிஸில் சிக்குகிறார். அதன்பின் என்ன ஆனது  என்பதை இனிவரும் எபிசோடுகளை பார்ப்போம். 




Advertisement

Advertisement