தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கூட்டணியாக அறியப்படும் விஜய் ஆண்டணி – சசி இணைந்து கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள புதிய படம்தான் 'நூறு சாமி'.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வேட்டிமாறன் சமீபத்தில் வெளியிட்டார். போஸ்டர் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் இந்தப் படத்தில் ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டணியே தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேலும் 'நூறு சாமி' திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடித்துள்ள 'நூறு சாமி' படத்தின் 'மாய கனவோ' பாடல் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த இந்த வெற்றி கூட்டணி, 'நூறு சாமி' மூலம் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Listen News!