ஹிந்தியில் அறிமுகமான நடிகை ஜோதிகாவுக்கு தமிழ் சினிமாதான் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. இவர் கிளாமர், ஹோம்லி என பல கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுடன் நடித்த போது அவரை காதலித்து, நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2006ஆம் ஆண்டு இருவரும் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு தற்போது தியா என்ற மகளும் ஒரு மகனும் காணப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார். அதன்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தார். அதன்படி 36 வயதினிலே, ராட்சசி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

அதற்குப் பின்பும் தமிழில் பல படங்களில் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய கவனம் ஹிந்தி பக்கம் திரும்பியது. அதன்படி 'சைத்தான்' படத்தில் நடித்திருந்தார். ஆனாலும் ஹிந்தியில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பின்பு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையிலேயே குடியேறியுள்ளார்.
இந்நிலையில் நடிகை ஜோதிகா ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, அவர் அணிந்திருந்த ஆடையும் அழகும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நேற்றைய தினம் மும்பையில் நடந்த 'ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' விழாவில் கருப்பு நிற மாடர்ன் உடையில் ஜோதிகா தோன்றினார். இதைப் பார்த்த ரசிகர்கள் "ஜோதிகாவுக்கு வயசே ஆகாதா?" என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Jyotika 💥
pic.twitter.com/DPPG142gX5
Listen News!