• May 08 2026

சிங்கா படத்திலிருந்து வெளியான 'காதுக்குள்ள குருவி' பாடல்..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குனரான ராஜதுரை சிங்கம் எழுதி உருவாக்கிய திரைப்படம் தான்  “சிங்கா”. இந்த படத்தில் கயல் படத்தில் நடித்த சந்திரன் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

மேலும், மலையாள நடிகைகளான சிஜா ரோஸ் மற்றும் மீனாட்சி ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் ஆதித்யா கதிர், சூப்பர் குட் சுப்ரமணி, டி.எஸ்.ஆர்., மற்றும் மலையாள நகைச்சுவை நடிகர் அரிஸ்டோ சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


“சிங்கா” படம் வெறும் நாயைப் பற்றிய கதையாக அல்ல, அன்பு, தேடல், நம்பிக்கை போன்ற மனநிலைகளையும், மனிதனின் மனதில் பறக்கும் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. இப்படத்தில் நாயுடன் இணைந்து நடிப்பது மிகவும் சவாலானது என்றும் கதாநாயகன் சமீபத்தில் பேட்டியொன்றில் தெரிவித்தார்.

இந்த நிலையில், சிங்கா படத்திலிருந்து “காதுக்குள் குருவி” பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் அந்த பாடலை பார்த்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement