தமிழ் சினிமாவில் வெளியான 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'போர்', 'அநீதி', 'ரசாவாதி' போன்ற படங்களின் மூலம் மக்களின் மனதில் நிலையான இடம் பெற்றவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் நாயகனாகவும் நடித்து தனக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து, நடிகை அதிதி சங்கர் உடன் இணைந்து “ஒன்ஸ்மோர்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே 'குட் நைட்', 'லவ்வர்' போன்ற படங்களை தயாரித்துள்ளது.
ஒன்ஸ்மோர் திரைப்படம் ரொமாண்டிக் காதல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எக்யூலா இயக்கியுள்ளார், மேலும் ஹேஷாம் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஒன்ஸ்மோர் படத்தின் டீசர் பட குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீசரில் சோனா ஓலிக்கல் அறிமுகமாகி இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், படத்தில் இடம்பெற்ற அடுத்த பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#OnceMore - “THE OTHER WORLD” TEASER is out now 🎬
Introducing @OlickalSona as “Indra” ❤️✨
This Summer.. Bringing love straight out of Calicut.. Step into the world of Raghu and Indra.. 🤗
Next Single - “Indra” drops this Friday at 5PM 🥁
Written & directed by @isrikanthmv… pic.twitter.com/E8EqHqMeSk
Listen News!