• Jun 07 2025

முத்த மழை பாடலை நீக்கினது துரோகம்.! அதுதான் தோல்விக்கு காரணம்.! அந்தணனின் கருத்துக்கள்...

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகத்தில் சமீபத்தில் பேசப்படும் விவாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது, ‘தக் லைஃப்’ திரைப்படம். இப்படத்தைச் சுற்றி உருவாகியுள்ள விமர்சனங்கள் மற்றும் இயக்குநர்களின் தற்போதைய அணுகுமுறை குறித்து வலைப்பேச்சு அந்தணனின் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோவில், அவர் சில புதுப்படங்களை பாராட்டியும், சில பிரபல இயக்குநர்களை நேரடியாக விமர்சித்தும் பேசியுள்ளார்.


சமீபத்தில் வெளியான இந்த வீடியோவில் அந்தணன், “இப்போது ரசிகர்கள் சொல்லுகிறார்கள்… 50 வயதுக்கு மேல் இருக்கிற எல்லா தயாரிப்பாளர்களையும் சினிமாவிலிருந்து விலக்கிவிடுங்க. நாமும் அதையே சொல்லணும். அவர்கள் ஒருகாலத்தில் சூப்பர் ஹிட் படங்கள் எடுத்தவர்கள். ஆனா இப்போ… அவர்களது நிலைமை பாவம்.” என்றார்.

இந்த ஓரே ஒரு கருத்துக்குப் பலரும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள், கருத்துகள், பகிர்வுகள் எனப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். இந்த வயது விவாதமே திரைப்படத் துறையில் புதிய தலைமுறைக்கும் பழைய தலைமுறைக்கும் இடையே ஒரு எல்லை விரிவாக பேசப்படத் தொடங்கியுள்ளது.


‘தக் லைஃப்’ திரைப்படம் மணிரத்னம் இயக்கி, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பிரமாண்ட முயற்சி. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் படம் கிளிக் ஆகவில்லை என்றே சில விமர்சனங்கள் வந்தன. இதனை அடிப்படையாக வைத்து அந்தணன் தனது வீடியோவில், "மணிரத்னத்திற்கு இப்ப இருக்கிற இளைஞர்களைக் கவரும் விதத்தில் படத்தினை எடுக்கத் தெரியவில்லை."  என்று தெரிவித்துள்ளார்.

அந்தணன் மேலும் தனது வீடியோவில், திரைப்படத்தில் இடம்பெற வேண்டியிருந்த “முத்த மழை” என்ற பாடல் குறித்தும் பேசினார்.“தக் லைஃப் படத்தின் பாடல்கள் சூப்பரா இருக்கு. ஆனா நீங்கள் “முத்த மழை” மாதிரி ஒரு பாடலை படத்திலிருந்து தூக்கியது…மிகப்பெரிய துரோகம்." எனவும் கூறியிருந்தார். 


இதையும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தலையாய விவாதமாக நடத்தி வருகின்றனர். “முத்த மழை பாடல் நீக்கப்படாம இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும்” என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர் என்றும் அந்த வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement