• Jun 07 2025

தியட்டரில் Cut பண்ண காட்சிகள் இப்போது முழுமையாக... விடுதலை 2’ DIRECTOR’S CUT வைரல்.!

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை பாகம் 2, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய படம். இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் ஓடிடியில் வந்தால், ரசிகர்கள் ‘original version’ இல்லை என்று விவாதிக்கிற அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில், அமேசான் ப்ரைம் வீடியோவில் 'விடுதலை பாகம் 2' திரைப்படத்தின் Director’s Cut பதிப்பு வெளியானது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


முதலில் திரையரங்குகளில் வெளியான படம் 2 மணி 46 நிமிடங்கள் நேரமுடையதாக இருந்தது. அதில் சில முக்கியமான காட்சிகள், நடையை மெல்லமாக கொண்டு செல்லும் என்ற காரணங்களால் வெட்டப்பட்டிருந்தன.

இப்போது Director’s Cut பதிப்பில் சேர்க்கப்பட்ட காட்சிகள் மூலம் 3 மணி 7 நிமிடங்களாக வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக அமைகின்றது. இயக்குநர் வெற்றிமாறன், இந்திய சினிமாவில் அழுத்தமான சமூக அரசியல் கூறுகளுடன் படங்களை உருவாக்கும் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுகின்றார். 


Director’s Cut பதிப்பில் பல காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை, திரையில் காணாத previously removed sequences கூட மனதை ஆழமாகக் கிளர்ச்சியடையச் செய்கிறது. Director’s Cut என்பதன் வாயிலாக, ஒரு திரைப்படம் புது வடிவில், புதிய தாக்கத்துடன் உருவாகி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement