• Apr 15 2026

'விடுதலை 2' திரையிட இன்னும் தாமதமாகலாம்! ஆனால் யாரும் எதிர்பார்க்காத புது டுவிஸ்ட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக காணப்படுவது அடுத்த வருடம் வெளியாகவுள்ள வெற்றிமாறனின் விடுதலை 2 படம் தான். இதன் முதல் பக்கம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தையே அதில் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன் தனது படங்களில் கம்யூட்டர் கிராபிக்ஸ், விஷுவல் எபெக்ட்ஸ் போன்றவற்றை கண்டிப்பாக தேவைப்படும் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவதை பின்பற்றி வந்தார்.


அத்துடன், விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோரின் இளம் தோற்றத்தை இந்த டீஏஜிங் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தை அவர் உபயோகப்படுத்தவுள்ளாராம். 

படத்தில் விஜய் சேதுபதி - மஞ்சுவாரியர் ஆகியோர் கணவன் மனைவியாக தோன்ற இருப்பதாகவும், இவர்கள் தொடர்பான காட்சிகள் 1960களின் பின்னணியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் சில புதிய நடிகர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பிரகாஷ்ராஜ் மற்றும்  விஜய் சேதுபதி மகன் சூர்யாவும் இணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் 'விடுதலை 2' படம் நிறைவடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டாலும் இந்த படத்தில் மேலும் சில நட்சத்திரங்கள் இணைந்துள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement