• Jan 19 2025

'புஷ்பா 2' பட இயக்குநருக்கு அடித்த பேரதிஷ்டம்! கோடி கணக்கில் எகிறும் சம்பளம்? வெளியான அப்டேட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

புஷ்பா முதல் பாகம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்தது. சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். மாஸ் கமர்ஷியல் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து. அல்லு அர்ஜுனின் கெரியர் பெஸ்ட் திரைப்படமாக புஷ்பா முதல் பாகம் அமைந்துள்ளது. 


அந்த சாதனையை புஷ்பா இரண்டாம் பாகம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், டோலிவுட்டின் முன்னணி இயக்குநர் சுகுமாருக்கு ரூ. 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


அந்தவகையில், புஷ்பா முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் அதன் ஓடிடி உரிமையை பெரிய தொகைக்கு விற்பனை செய்துள்ளார்களாம். இதன் காரணமாக  படத்தின் இயக்குநருக்கு ரூ.100 கோடி வரை சம்பளமாக கொடுக்கவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் தகவல் கசிந்துள்ளது.

அவ்வாறு, குறித்த இயக்குநருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டால்,  இயக்குநர் ராஜமவுலிக்கு அடுத்தபடியாக டோலிவுட்டில் ரூ.100 கோடி சம்பளம் பெறும் இயக்குநராக சுகுமார் காணப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement