• Apr 15 2026

முதல்ல போய் குளிங்க..! அர்ச்சனாவை திடீரென அசிங்கப்படுத்திய விஸ்ணு! இது தான் காரணமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அர்ச்சனாவும் விஸ்ணுவும் பிக் பாஸ் வீட்டில் அனைவர் முன்னிலையிலும் முட்டி மோதிக் கொண்டுள்ளனர்.


அதன்படி, இன்றைய தினம் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் அனைவரும் கூடி இருக்கின்றனர். அந்த நேரத்தில், அர்ச்சனாவை பார்த்து விஸ்ணு, நைட் முழுக்க முழிச்சிட்டா இருந்தா என கேக்க, நீங்க என்ன பண்ணீங்க இந்த வாரம் முழுக்க என அர்ச்சனா விஸ்ணுவை பார்த்து வினாவுகிறார்.


இதற்கு, நீங்க என்ன பண்ணீங்க முதல்ல, நீங்க ஒர்க் பண்ணவே இல்ல, வாயால மட்டும் வட சுடுறீங்க என விஸ்ணு சொல்ல, நீங்க என்ன பண்ணிங்களோ அதான் நானும் பண்ணினான், நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க? யாரு வருவாங்க, யாரு வெளிய போவாங்க, யார்ட தட்டுல எத்தின தோச இருக்கு, எனக்கு ஏன் அத்தின தோச வரல, இதுதான் உங்க கவலையா இருந்துச்சு. முதல்ல உங்க முதுகில இருக்கிற அழுக்க தொடைங்க என அர்ச்சனா சொல்லுகிறார்.

இதையடுத்து, முதல்ல நீங்க உங்க அழுக்க தொடைங்க, நீங்க மொத்த அழுக்காவே உட்காந்து இருக்கீங்க..முதல்ல போய் குளிங்க என  விஸ்ணு சொல்லுகிறார். இதை தொடர்ந்து இருவரின் சண்டையையும் விசித்ரா வந்து பேசி தீர்த்து வைக்கிறார்.

Advertisement

Advertisement