• Oct 16 2024

இதுவரை யாரும் பார்த்திடாத பிக்பாஸ் மாயாவின் உண்மை முகம்! இப்படியொரு திறமையா? வேற லெவலில் வைரலாகும் வீடியோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்குபற்றிய போட்டியார்களுள் ஒருவராக காணப்படுவர் தான் மாயா கிருஷ்ணன். இவர் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்தாலும் தற்போது அவர் தொடர்பில் சுவாரசியமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


மாடல் அழகியான மாயா கிருஷ்ணன் 1992ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர். பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.


சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வமாக இருந்த இவர், கல்லூரியில் படிக்கும் போதே, டிவாய்ட் ஆப் எக்ஸைட்மென்ட் மற்றும் எ வேஸ்டட் எபோர்ட் என்ற நாடகங்களில் நடித்தார். 


அதன் பிறகு, ஜேம்ஸ் வசந்தனின் வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு தனுஷ் நடித்த தொடரி படத்தில் பத்திரிகை நிருபராக நடித்தார்.


விக்ரம் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தாலும், கால் கேர்ள் கேரக்டரில் நடித்து ஆ...ஹூம்...என கத்தி அனைவரும் கவனிக்கும் நடிகையாக மாறினார். மேலும், இவரது சகோதரி சுவாதி எஸ். கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் பாடகியாக இருக்கிறார்.


இந்த நிலையில், மாயா தனது நடிப்புத்துறையில் காட்டிய ஆர்வத்தை வெளிக்காட்டும் வகையில் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.இதனை பார்க்கும் போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாயாவா இது என நினைக்க தோன்றுகிறது. இதோ அந்த வீடியோ....





 

Advertisement