தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்றைய தினம் பிரம்மாண்டமாக விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாடு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டும் இல்லாமல் பல பிரபலங்களுக்கும் சச்சையான ஒரு சம்பவமாக பார்க்கப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்துவரும் விஜய் தனக்கு இருக்கும் பெயரையும் புகழையும் சம்பளத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்வதற்காகவே அரசியலில் நுழைந்துள்ளார். இது பல அரசியல் கட்சிகளுக்கும் பெரும் தலை இடியாக மாறி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், இதில் உரையாற்றிய விஜயின் பேச்சு மற்றும் அவரது கொள்கைகள், செயல் திட்டங்கள் என்பன விரிவாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. இதனை பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் விமர்சனம் செய்து பதிவிட்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் நடிகரும் இயக்குனரும் ஆன போஸ் வெங்கட் விஜயை தரக்குறைவாக விமர்சித்து தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அவருடைய பதிவு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், , “ யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. 😁😁😁” என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கங்குவா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவை அரசியலுக்கு அழைத்த போஸ் வெங்கட், தற்போது விஜயின் அரசியலை தரக்குறைவாக பேசி உள்ளமை குறிப்பிடத்தக்கது .
Listen News!