• Jan 19 2025

தற்கொலைக்கு முயற்சி செய்த செல்வராகவன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் ராயன். அவரின் நடிப்புக்கு ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ஒரு வீடியோவில் பேசியது தற்போது ரசிகர்களிடத்தே அதிர்ச்சி ஏற்றப்படுத்தி உள்ளது. 


அதில் "உலகம் முழுவதும் பார்த்தாலும் வாழ்க்கையில் இந்த இரண்டையும் அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது; ஒன்று தற்கொலை முயற்சி, இன்னொன்று டிப்ரஷன். நான் ஏழு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளேன், ஆனால் இப்பொழுது அல்ல, சில வருடங்களுக்கு முன்பு. ஒவ்வொரு முறையும், தற்கொலைக்கு முயலும் போது, உள்ளே ஒரு குரல் கேட்கும். 'ஏதோ சொல்ற மாதிரி, ஏதோ கேக்குற மாதிரி இருப்பதை உணர்வேன். கடவுள் ஏதோ சொல்கிறார் என நினைத்து விட்டுவிடுவேன்.


அதன் பிறகு, 10 நாள் கழித்து, அல்லது ஆறு மாதம், ஒரு வருடம் கழித்து கூட வாழ்க்கை திடீரென மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் மாறும். அப்போது, தற்கொலை செய்து கொண்டிருந்தால் எல்லாமே போயிருக்குமே என்று நான் நினைப்பேன். வாழ்க்கையே அதுதான். தற்கொலை செய்ய முயற்சிப்பவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்றால், அடுத்த ஜென்மத்திலாவது நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் எனும் நம்பிக்கையே. 

d_i_a


நமக்கு கேட்கும் அந்த குரல் கடவுளின் குரலாகவோ அல்லது வேறு யாரின் குரலாகவோ இருக்கலாம். என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள், ஆனால் அந்த குரல் கேட்காமல் இருக்காது. இது உண்மையானது என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இதனால் இணையத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.,  ஏற்பட்டுள்ளது. 





Advertisement

Advertisement