• May 04 2026

ஒரே ஒரு கசிவால் இத்தனை கோடிகள் கரைந்ததா.? 'ஜனநாயகன்' படத்தின் ஓடிடியும் சிக்கலில்..

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரைக்கு வருவதற்குமே முன் அடுத்தடுத்து பல  சிக்கல்களை சந்தித்து வருகிறது. 

அதன்படி, முதலில் ஜனவரி 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட படம், தணிக்கைச் சான்றிதழ் தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்தது. இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், படக்குழுவுக்கு பெரிய பின்னடைவாகவும் அமைந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தை மே 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் கசிவு சம்பவம் படத்தின் வணிகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதன்படி, ஜனநாயகன் படத்தை முன்னதாக உயர்ந்த தொகைக்கு ஓடிடி உரிமை வாங்கியிருந்த நிறுவனம், ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் புதிய தளத்துடன் குறைந்த தொகையில், சுமார் ரூ.50 கோடிக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாற்றத்தால் படக்குழுவிற்கு சுமார் ரூ.70 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரைக்கு வருவதற்குமே முன் இத்தனை சவால்களை எதிர்கொண்ட ‘ஜனநாயகன்’, வெளியீட்டுக்குப் பிறகு எப்படி வரவேற்பைப் பெறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement

Advertisement