• Aug 06 2025

ரெடியாகிடிச்சி "கோட்" படத்தோட அடுத்த பாடல், பாடினது இவங்களா !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் திரையுலக முன்னணி நாயகன் தளபதி விஜய் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படமான "கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" தமிழில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவரவிருக்கும் ஆக்ஷன் திரைப்படமாகும்.

GOAT gets a special teaser on Vijay's ...

விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதுடன் பிரசாந்த் பிரபுதேவா என மற்றைய நடிகர்களின் கூட்டணி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதுடன் நாளுக்கு நாள் வெளியாகும் படத்தின் புதிய அப்டேட் மற்றும் அறிவிப்புகள் படத்தின் ப்ரோமோஷனுக்கான சரியான வேலையை செய்தவாறுள்ளன.


இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பு ரசிகர்களுக்கு மேலுமொரு கொண்டாட்டத்தை கொடுக்க காத்திருக்கிறது. "கோட்" படத்தின் மூன்றாவது பாடல் வருகிற மாதம் முதல் வாரத்தில் வெளிவர இருப்பதாகவும் பாடலை பாடியது ஸ்ருதி ஹசன் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement