• Jan 19 2025

அடுத்த தளபதி இந்த பிரபலம் தானாம்..?? ஷாக் இன்ட்ரோவுடன் தமிழில் ஹீரோவாகும் காத்து கருப்பு கலை! ரொம்ப பெருமையா இருக்கு...

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  டிக் டாக் பிரபலங்கள், இன்ஸ்டா பிரபலங்கள், யூடியூப் பிரபலங்கள் என பலரும் தற்போது தொடர்ச்சியாக சினிமா துறையில் அறிமுகமாகி வருவதை நாம் அவதானிக்கலாம்.

அதன்படி சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள், யூடியூப், பிராங் பேட்டிகள்  மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இளைஞர் ஒருவர் தான் கலை எனும் காத்து கருப்பு கலை.

இவர் ஆரம்பத்தில் நகைச்சுவையாக பேசி, பாடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆனாலும் நாளடைவில் ரசிகர்கள் முகம்சுழிக்கும் வகையில் நடந்து கொண்டார்.


இந்த நிலையில், காத்து கருப்பு கலை ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ஒன்று தற்போது உருவாகி வருகின்றது. அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஒருவரும் இணைந்துள்ளார். இந்த படத்திற்கான பூஜை தற்போது நடைபெற்றுள்ளது.


அதன்படி இந்த படத்திற்கான பூஜை நடை பெற்று முடிந்த பின் ஊடகவியலாளர்களை சந்தித்த படக்குழுவினர், காத்து கருப்பு கலைதான் அடுத்த தளபதி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார்கள்.


மேலும் இந்தப் படத்தில் உள்ள ஒரு வசனத்தை பேசிய காத்து கருப்பு கலை, இந்த வசனம் இந்த படத்தில் இருந்த காரணத்தினால் தான் நான் நடிக்கவே ஒப்புக் கொண்டேன் எனவும் கூறியுள்ளார். தற்பொழுது அந்த வசனம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சோசியல் மீடியா ஊடாக பிரபலமான புது முகங்கள் சினிமாவிற்கு வருவது வரவேற்கத்தக்கது என்றாலும், அவர்களின் சில நடவடிக்கைகள் முகம்சுழிக்க வைத்திருந்தமை தொடர்பில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement