• Jan 26 2026

எப்படி இருக்கீங்க நண்பா.. அஜித்திடம் ஃபோனில் பேசிய விஜய்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் அஜித், கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக வீடு திரும்பியுள்ளார்.

நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு வதந்திகளும் பரவலாக பேசப்பட்டது.


ஆனாலும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித்தின் காதிற்கு கீழ் சின்ன கட்டி இருந்ததாகவும் அது அகற்றப்பட்டு தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில், அஜித்திற்கு நெருங்கிய நண்பரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் அஜித்திற்கு போன் செய்து நலம் விசாரித்து உள்ளாராம்.

அதன்படி, நண்பா எப்படி இருக்கீங்க என கேட்டு நலம் விசாரித்துள்ளார் நடிகர் விஜய்.




  

Advertisement

Advertisement