• May 28 2025

இசை ஓட ஆரம்பிச்சாச்சு…இனி "DUDE" பண்ணுறதெல்லாம் fire தான்..! இயக்குநரின் பதிவு.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் நடிகராக உருவெடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். 'லவ் டுடே' படத்திற்குப் பிறகு, ரசிகர்களுக்கு பிரதீப் மீது இருக்கும் எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே போகின்றது. இந்நிலையில், அவர் நடிக்கும் அடுத்த படம் 'DUDE' எனும் தலைப்பில் உருவாகி வருகின்றது.


இந்தப் படத்தின் இசையமைப்பு பணிகள் தற்போது அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளதென்பது, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'DUDE' படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன், தனது அதிகாரபூர்வ X தளப்பக்கத்தில், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். 

இந்தச் செய்தி வெளியான உடனேயே, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே #DudeTheMovie என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகத் தொடங்கியது. பிரதீப்பின் டிராகன் வெற்றியைப் பார்த்த பிறகு, இந்தப் படம் மீதும் மக்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.


தற்போது இசைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஜூலை மாத இறுதியில் முதலாவது பாடல் வெளியாகும் என சிலர் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வருட இறுதிக்குள் படம் ரிலீஸாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement