• Apr 30 2024

'பேபி ஜான்' திரைப்படம் சொன்னபடி ரிலீஸ் ஆகாது! அட்லீக்கு வந்த சோதனை

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக காணப்படும் அட்லி, தற்போது தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்து வருகிறார்.

இந்தப் படத்தில் வருண் தவான் நாயகனாக நடிக்க, இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றார்கள், இதனை காளிஸ் இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு பேபி ஜான் என பெயர் இடப்பட்டுள்ள நிலையில், இந்தப் படம் எதிர்வரும் மே 31-ம் தேதி வெளியிடப்படும் என அண்மையில் இந்த படத்தின் போஸ்டரோடு பட குழுவினர் தெரிவித்து இருந்தார்கள்.


இந்த நிலையில்,  மே 31-ஆம் தேதி ரிலீசாக இருந்த பேபி ஜான் படம்  தள்ளி போய் உள்ளது.

அதாவது இந்த படத்திற்கான சூட்டிங் இன்னும் 10 தொடக்கம் 12 நாட்கள் நடைபெற உள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் கல்கி2898AD  திரைப்படமும் பேபி ஜான் திரைப்படமும் ஒரே தேதியில் வெளியாகும்  எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement