• Jan 19 2025

மனோஜ் பிச்சையெடுக்க காரில் ஸ்பாட் தேடியலைகிறாரா மீனா? இனி நிகழப்போவது இது தான்?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் முத்து, மீனா கதாபாத்திரங்கள் தான் முக்கிய கதாபாத்திரங்களாக இந்த சீரியலில் திகழ்ந்துவரும் நிலையில், இவர்களுக்கு அடுத்த கதாபாத்திரங்களாக காணப்படுவது மனோஜ் மற்றும் ரோகிணியின் கதாபாத்திரங்கள் தான்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி செய்த தில்லாலங்கடி வேலைகள் எப்போது விஜயாவுக்கு தெரியவரும், அதற்குப் பிறகு அவர் எடுக்கும் முடிவு என்ன? மனோஜ் அவரை ஏற்றுக் கொள்வாரா என ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் தம் வசம் வைத்துள்ளார்கள். அத்துடன் ரோகிணி சீக்கிரம் வீட்டில் மாட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

ரோகிணிக்கு ஏற்ற வகையிலேயே அவரது கணவர் மனோஜ் வேலைக்கு போவதை பெரும் துயராக எண்ணுகிறார். அவரும் அடிக்கடி திருட்டு வேலைகளை செய்து மாட்டிக் கொள்ளும் ஒரு கேரக்டராகவே இந்த சீரியலில் காணப்படுகிறார்.


தற்போது தனக்கு கனடா செல்வதற்கு பணம் தருமாறு விஜயாவிடம் கேட்டார். ஆனால் உனக்கு பணம் தந்து விட்டு நாங்கள் நடுத் தெருவில நிக்க வேண்டுமா? என சரமாரியாக கிழித்துள்ளார் விஜயா.

இதைத்தொடர்ந்து அவரது  பார்க் ஃபிரண்டிடம் பண உதவி கேட்க, அவரும் மறுக்கிறார். ஆனால் அவர் ஒரு சாமியாரிடம் கூட்டிக் கொண்டு செல்வது போல இன்றைய எபிசோடு காட்டப்பட்டது.


இதை அடுத்து நாளைய எபிசோட்டில் கோயில் ஒன்றின் வாசலில் மனோஜ் இருந்து பிச்சை எடுப்பது போலவும், அந்த கோயிலுக்கு மீனா செல்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் மீனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பிச்சைக்கார வேஷத்தில் மனோஜ் இருக்க, மீனா அவரை காரில் கூட்டிச் செல்வது போல் ரிலீஸ் ஒன்று போட்டுள்ளார்.

இதை வைத்து பார்த்தால் கோவிலில் இருந்து பிச்சை எடுக்கும் மனோஜை பார்த்துவிட்டு, மீனா அவரை அழைத்துக்கொண்டு காரில் வீட்டுக்கு செல்வது போல தெரிகிறது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குது என...


Advertisement

Advertisement