• Jan 18 2025

இயக்குனர் அவதாரம் எடுக்கும் முக்கிய பிரபலம்! சிம்புதான் ஹீரோ! அனலாய் வந்த அப்டேட்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வருகிறார் யுவன். ஒவ்வொரு பாடலையும் பார்த்து பார்த்து செதுக்கி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் யுவன். இவர் இசையமைப்பாளாராக மட்டுமல்லாமல், படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். 


பியார் பிரேமா காதல் போன்ற ஒரு சில படங்களை தயாரித்த இவர், அந்த படங்களுக்கு இவரே இசையமைத்து பாட்டுக்களை வேற லெவல் ஹிட் செய்தார். எல்லாவற்றிலும் சகலகலா வல்லவனாக இருக்கும், யுவன் இன்னும் நடிக்க மட்டும் முயற்சி செய்யவில்லை. அவருக்கு அதில் ஆர்வமும் ஏற்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இவருக்கு சினிமாவில் பல விஷயங்களை explore செய்து பார்க்க மிகவும் பிடிக்குமாம்.


இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கொண்டென்ட்டுகளை வாரி வழங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது புதிதாக இயக்குனர் அவதாரம் எடுக்கவிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அவர் வாயாலே சொல்லி இருக்கிறார். மேலும் அவர் இயக்க போகும், புதிய படத்தில், சிம்பு ஹீரோவாக நடிப்பார் என்றும் புது அப்டேட் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் காம்போ 100 சதவீத ஹிட்டுதான் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள். 

Advertisement

Advertisement