• Apr 26 2024

திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது- மு.க.ஸ்டாலினின் மனதை உருக்கும் இரங்கல்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மிமிக்கிரி கலைஞராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து 1984-ஆம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான 'தாவணிக்கனவுகள்' என்ற படத்தில் பல கனவுகளுடன் கூட்டத்தில் ஒருவராக நுழைந்தவரே நடிகர் மயில்சாமி.


இப்படத்தினைத் தொடர்ந்து பின்னர் 'கன்னி ராசி, என் தங்கச்சி படிச்சவ, அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா' போன்ற அடுத்தடுத்த பல படங்களில், ஸ்டார் நடிகர்களான கமல், ரஜினி, பிரபு ,சத்தியராஜ், விஜயகாந்த் என பலருடனும் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவை நடிகர் என முத்திரை பதித்தார்.


இவர் திரைப்படங்களில் மட்டுமன்றி தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இவ்வாறு சின்னத்திரை, வெள்ளித்திரை என பிசியாக இருந்து வந்த மயில்சாமி இன்றைய தினம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


இவரின் இறப்பிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதாவது "பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்தவர். தன்னுடைய ஒலி நாடாக்கள் வழியாக தமிழகம் முழுவதும் அறிமுகமானவர் மயில்சாமி. 'காமெடி டைம்' நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகின்ற அளவிற்கு அன்பைப் பெற்றவர்.


கலைஞரின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தன்னுடைய கருத்தை ஆழமாகப் பதிவு செய்யக் கூடியவர். திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது" எனக் கூறியுள்ளார். இவ்வாறாக மயில்சாமியின் மரணத்திற்கு மனதை உருக்கும் வகையில் இரங்கல் தெரிவித்திருக்கின்றார் மு.க.ஸ்டாலின் அவர்கள்.    

Advertisement

Advertisement

Advertisement