• Jan 19 2025

27 லட்சத்தை தூக்கிட்டு ஓடிய ஜீவாவுக்கு ஒருநாள் சம்பளம் இவ்வளவுதானா? படித்த படிப்பு என்ன தெரியுமா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஜீவா என்ற கேரக்டரில் நடித்த நடிகை அட்சய பாரதி ஒரு இன்டீரியர் டிசைனர் என்பதும் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 40 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததாகவும் ஆனால் தற்போது சீரியல் கிடைக்கும் வருமானம் குறித்த தகவலை சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜை நயவஞ்சகமாக ஏமாற்றி அவருடைய 27 லட்சத்தை திருடி கொண்டு கனடா சென்று விட்ட ஜீவா என்ற கேரக்டர் கடந்த சில மாதங்களாக சீரியல் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தான் ரீ என்ட்ரி ஆகியுள்ளது என்பதும் இன்றைய எபிசோடின் இறுதியில் கூட அவர் மனோஜ் மற்றும் ரோகிணி இடம் ஜீவா சிக்கிக்கொண்ட காட்சிகள் இருக்கிறது என்பதும் பலர் அறிந்திருக்கலாம்.

இந்த நிலையில் ஜீவா என்ற கேரக்டரில் நடித்த அட்சய பாரதி சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இன்டீரியர் டிசைனர் பொறியாளர் என்றும் படிப்பை முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் 40 ஆயிரம் ரூபாய்க்கு சம்பளத்திற்கு வேலை பார்த்ததாகவும் தெரிவித்தார். ஆனால் தனக்கு சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது என்றும் அந்த ஆசையை சொன்ன போது குடும்பத்தினர் இதற்காகவா உன்னை கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிக்க வைத்தோம் என்று புலம்பியதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

பெற்றோருக்காக ஒரு சில வருடங்கள் வேலை பார்த்த பின் அதன் பின் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி சீரியலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தேன் என்றும் தற்போது ’சிறகடிக்க ஆசை’ சீரியல் தனக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இன்டீரியர் டிசைனிங் வேலையில் மாதம் 40 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எனக்கு சீரியலில் தினமும் ரூ.3000 சம்பளம் கொடுக்கிறார்கள் என்றும் ஆனால் போக போக பிரபலம் ஆகிவிட்டால் இதில் பெரிய அளவில் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை தனக்கு இருப்பதாகவும் அட்சய பாரதி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement