• Jan 18 2025

போஸ் வெங்கட் இயக்கும் படத்தை வெளியிடும் லெஜென்டரி இயக்குனர்! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். 

கமர்ஷியல் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தோடு அடுத்ததாக வெளிவந்த ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளைப் பெற்றது.

இதனை அடுத்து இவரது இயக்கத்தில் வெளியான விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.


மேலும் அசுரன், விடுதலை ஆகிய படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில், சின்னத்திரை சீரியல் நடிகரான போஸ் வெங்கட் இயக்கிய திரைப்படத்தை தற்போது வெற்றிமாறன் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.


தமிழ் சினிமாவில் 'கன்னி மாடம்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் போஸ் வெங்கட். இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் நடித்துள்ளார். வித்தியாசமான கதை களத்துடன் வெளியான 'கன்னி மாடம்'  படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து மா.பொ.சி என்ற படத்தை இவர் இயக்கினார்.

இந்த படத்தில் நடிகர் விமல் உட்பட பல நடிகர்கள் கமிட்டாகியுள்ள நிலையில், சிறந்த திரைப்படங்கள் இயற்றி பிரபல இயக்குனராக காணப்படும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தை வெற்றிமாறன் வெளியீடு செய்வதால் நிச்சயம் இந்த திரைப்படத்தின் கதைக்களமும் வித்தியாசமாக இருக்கும் என மேலும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement