• Jul 02 2025

சூப்பர் லுக்கில் தொகுப்பாளினி கிகி..! லேட்டஸ்ட் ஸ்டில்கள் வைரல்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவிலும் தொலைக்காட்சித் துறையிலும் தன் இனிமையான பாவனை எளிமையான நடத்தை மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் கிகி என செல்லமாக அழைக்கப்படும் கீர்த்தி.


தொகுப்பாளினி, மாடல், நடிகை என பல பரிமாணங்களில் தன்னை நிரூபித்த கீர்த்தி நடிகர் சாந்தனு பாக்கியராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டு தமிழ் திரையுலகின் ரசிகர்களிடம் பிரபல ஜோடியாக இருந்து வருகிறார். இருவரும் இணைந்து பகிரும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.


இந்த நிலையில் தற்போது கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அழகிய புடவை உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மருன் மற்றும் மஞ்சள் நிற சேலையுடன் எடுத்திருக்கும் இப்புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement