பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்திய சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்த பிறகு, ஹாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்து உலகளவில் கவனம் பெற்றார்.

குறிப்பாக ஹாலிவுட் வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, சர்வதேச அளவில் இந்திய நடிகைகளுக்கு புதிய பாதையை உருவாக்கியவராக பார்க்கப்படுகிறார்.
இதற்கிடையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் இந்திய ரசிகர்களை கவர தயாராகியுள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடத்திய கிளாமர் போட்டோஷூட் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்டைலிஷ் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகின்றன.
பலரும் அவரது அழகையும், ஃபேஷன் சென்ஸையும் பாராட்டி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். வயது அதிகரித்தாலும் அதே கவர்ச்சியுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.
Listen News!